எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 12 ஜூன், 2015

ஒரு டைரிக்குறிப்பும், பாசக் கிறுக்கும்.



எழுதி அழிக்க
மனசென்ன
கரும்பலகையா

வெட்டி முறிக்க
ஸ்நேகமென்ன
வெறும் கிளையா

புதிதாய்
ஸ்நேகம் பூத்தால்
பழைய முகங்கள்
அறுந்த காலணியா

தூரப்போகையிலும்
நீளும் உறவே
தூய ஸ்நேகம்.

அய்யராத்து பாஷை-- பங்களா புதூர் கிராமப் பெண் பேச்சு—மாப்பிள்ளை செவசெவன்னு எம் ஜியார் மாதிரி சுருள் முடி வெச்சுட்டா – புரு புரு மோட்டார் பைப் ( பைக் ) வாங்கித் தராங்களா ?  பொண்ணுக்கு பவுனு எத்தனை போடறாங்களாமா

திருமணம் – உடல்களின் சங்கமம் மட்டுமல்ல, உணர்வுகளின் எண்ணங்களின் மனங்களின் சங்கமமும் ஒரு அங்கம்.

கவிதை தாங்கியது – 4 முக்கிய நபர்.

பூபாளம் சுதந்திரப்பூ அரும்பின நாளில் வெளியானது. முதல் கவிதை அலைச்சல் – பை மது..ரிப்போர்ட்டரும் கூட. J

ஏகலைவன் விரல் கேட்ட துரோணர் நல்லாசானா குற்றவாளியா

உன்ற – அப்பற அம்மணி பொறந்தநா எல்லா நல்லபடியா முடிஞ்சுதா ? கலிகாலம் – ஊட்டப் பூட்டி தொறப்புக்குட்டிய பத்ரமா எடுத்துப்போ

ஸ்நேகச் சிரிப்புகள் – பொறுக்கிய முத்துக்கள்.. பத்துப் பக்கம், ஒரு வாரம் ஒரு டைம் ஒரு கடிதம்.—எனக்கு மகிழ்வு தருகிற மனசைத் தடவிக் கொடுக்கிற மென்பூ.

டெலிகிராம் முதல் வாழ்த்துத் தந்தி வந்தது. கிஃப்ட் பிந்தி வந்தது. சுபமங்களம் இசைத்தது உன் வாழ்த்துப்பா. “ வெள்ளைத் தாளில் எண்ணங்களை எழுத்தாக்கி புது யுகத்திற்கு பூபாளமிசைக்கிற உனைப்போன்ற இளைய தலைமுறை நாளும் வளர வேண்டும். அதனை நானும் ரசிக்கணும் நாளும்.

இலட்சிய மலையே ஸ்நேகக் கயிற்றினைப் பந்தாக்கி ஏறுகிறேன். பாதி ஏறியபின் பாசக்கயிறு அறுந்து போயின்..?

WITH ADVANCED BIRTHDAY GREETINGS.

REALLY YOU ARE GREATER THAN ME IN MENTALLY AND ECONOMICALLY.

உன்னோடு ஸ்நேகமாய்க் கைகோர்த்துப் போவதில் நான் கர்வம் கொள்கிறேன். பிரியமான நடிகனைத் தொட்டுப் பார்க்கும் ரசிகனைப் போல, தலைவனோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட தொண்டனைப்போல. பாலுவின் கதைகளில் நானும் மனசை இழையோட விட்டு இருக்கின்றேன்.

PLEASE SEND THE MUGAPPU KAVITHAI TO ME. I WANT TO PRINT IT AND KEEP IT WITH ME..


எனக்கு புழுதிப் பூச்சில் முரண்பாடு. கிராமம்- கேட்டுப் பெறுகிற குணம்.

என்னைக்
கடந்துபோன
காலங்களே

என் செவிகளைத்
தாண்டிப்போன
கீதங்களே.

என் விழிகளில் இருந்து
விலகிப்போன
காட்சிகளே

மீண்டும்
ஒருமுறை
வந்துபோனாலென்ன

வேண்டாம்
வேண்டாம்
என் நெஞ்சில்தான்
இவையனைத்தும்
தங்கியிருக்கின்றனவே.

~~~~~~~~~
பூவுக்கும்
வண்டுக்கும்
ஸ்நேகத்தை
உண்டுபண்ணும்
பாசமது. 

-- 85  aam varuda diary. 


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைத்தது தொகுப்பு...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...