எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 மே, 2015

நானும் உமா மகேசும்.



மாட்டிக்கொள்வேனோ :-’

கவிதையென்றால்
எத்தனை பவுனில் இருக்கும்
எனக் கேட்கும் நகைப்பிசாசுகளிடம்
மாட்டிக்கொள்வேனோ.

கவிதையென்றால்
பாலியெஸ்டரா ஜியார்ஜெட்டா
எனக் கேட்கும் துணிக்கிறுக்குகளிடம்
மாட்டிக்கொள்வேனோ

கவிதையென்றால்
எந்தத் தியேட்டரில்
நடக்கிறது எனக்கேட்கும்
சினிமாப் பைத்தியங்களிடம்
மாட்டிக்கொள்வேனோ

கவிதையென்றால்
கணக்கில் பௌதீகத்தில்வரும் டிரைவேஷனா
எனக்கேட்கும் புழுக்களிடம்
மாட்டிக்கொள்வேனோ

கவிதையென்றால்
புதுவகைக் கம்ப்யூட்டரா
எனக் கேட்கும்
இயந்திரக் கிறுக்களிடம்
மாட்டிக் கொள்வேனோ

    ```````

உமா மகேஸ். 

மாட்டிக் கொள்ள
மாட்டாய் ! மாட்டாய் !

கவிதையென்றால் உன்
கண்ணிலிருந்து சில கணங்களில்
தெறித்து விழும்
கனவுத் துணுக்கா என்றும்

கவிதையென்றால்
வானம் வயதானதும் விடும்
நட்சத்திரப் பெருமூச்சா
என்றும்

கவிதையென்றால்
பூக்களுக்கு நீ சூட்டிய
இன்னொரு பெயரா என்றும்

கவிதையென்றால்
காகிதத்தைக் கருக்காமல்
காற்றுப்பட்டு அணையாமல்
கனலும் நெருப்பா என்றும்

கவிதையென்றால்
பிஞ்சுக் குழந்தை
தடுக்கித் தவித்து எழுதும்
முதல் அ வா என்றும்

கவிதையென்றால்
எழுதுவோரிடமிருந்து
படிப்போர்க்குத் தொற்றும்
சந்தோஷ ஜுரமா என்றும்

கேள்வி மலர்த்தும்
உதடுகள் உள்ளவரை
கவிதைக்கு அடையாளம் தேடி
விளம்பரம் கொடுக்கும்
மனிதர்களிடம் நீ
மாட்டிக் கொள்ள
மாட்டவே மாட்டாய். !

PLEASE DON’T WORRY.


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட...! பதிலும் அருமை...!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...