எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

அன்பு:-



அன்பு:-

அன்பு
அது ஒரு வரட்டு விலங்கு
கையில் அப்பும் காயாத ஓவியம்
கையைப் பிசுக்காக்கிக் கறைப்படுத்தும்

மழைவானம் போல
நசநசவெனப் பிடுங்கும் தொல்லை.
நாள்பட்ட நெயில்பாலிஷாய்க்
கட்டி கட்டியாகும்.
நகத்தைக் கோரமாக்கும்.

அன்பு
அது ஒரு அழுக்கான வார்த்தை
கனவில் பிதற்றும் சொல் கறுப்பு

விட்டில் பூச்சியிடம்
விளக்குக்கு ஏற்படும் சுயநலம்
மனிதர் செயல்களில்
ஏறிப்பயணிக்கும் அது
ஆதாயத்துடன் அடங்கிக் கொள்ளும்.

இது பேசி மயக்கி உதவி செய்ய
( தன் நலத்துக்கு ) வரும் மனிதனின்
முதல் கருவி. ஆயுதம்..

தாசிக்கு வாடிக்கையாளனிடம்
ஏற்படும் பரிவு.
அன்பு
அது காசுடன் கட்டிப்பிடித்துக் கிடக்கும்.

அன்பு
பெண்ணிடம் ஆணுக்கு
ஏற்படும் காமம்

அன்பு
அது ஒரு குப்பைத் தொட்டி.
மன அழுக்குகளைப்
ப்ரியம் என்ற பெயரில்
மறைத்துக் கொட்ட
வாங்கிக் கொள்ளும்
குப்பைத் தொட்டி.

முகத்தை மலர்த்திக்
கண்ணை விரித்து
இதழ் பிரித்துக்
கோரைப்பல் காட்டும்
இது அன்பாம்
ஹேஹ்ஹே
கையில் கவிதை நோட்டுச்
சொருகினனை ஏமாற்று.
இன்னும் பாசம் பூசு.

அன்பு
நினைத்தவுடன்
எழுதத் தோன்றும் கவிதை.
அன்பு
வெறும் மனசை மயக்கும்
வார்த்தைச் சப்தங்கள்.
அன்பு
வசந்தத்தைப் பவுடராய் அப்பி
ஏமாற்றும் குளிர்
அன்பு
அழித்து நொறுக்கும்
எரிமலைக் குழம்பு
அன்பு அர்த்தமிழந்த போலி.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஐயோ சாமி...! என்னா கோபம்...! அன்பு எனும் பெயரில் விரோதிகள் யாரேனும் உண்டா...? ஹா... ஹா...

Thenammai Lakshmanan சொன்னது…

அப்படி எல்லாமில்லை தனபாலன் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...