எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 நவம்பர், 2014

அரிசியா மனசா



கிழவியின் முறத்தில்
புடைபடுவது
அரிசியா மனசா

உயர ஓங்கி விழுந்து
அடிபடுவது
அரிசியா மனசா

தவிட்டுப் பேறுகளாய்
தட்டிவிட்டு அழுவது
அரிசியா மனசா

மரத்துண்டுக் குழிக்குள்
தீட்டப்படுவது
அரிசியா மனசா

தீட்டுப்பட்டது
மனசா அரிசியா..?

-- 84 ஆம் வருட டைரி.

6 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

நிச்சயம் மனசுதான்
அற்புதமான படைப்பு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அரிசியும் மனசும் சேர்ந்து மனசை மயக்கியது..

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரமணி சார்

நன்றி ராஜி

நன்றி தளிர் சுரேஷ்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

சாய்ரோஸ் சொன்னது…

மூன்று முறைக்கு மேல் படித்தும் நீங்கள் சொல்லவந்த கருத்தும் இதை எழுதிய மனநிலையும் எனக்கு புரிபடவேயில்லை.... இருந்தாலும் கவிதைக்குள் ஏதோவொன்று ரசிக்கும்படி இருப்பது மட்டும் புரிகிறது...

Thenammai Lakshmanan சொன்னது…

மனசு வருத்தப்படும் நேரம் பார்க்கும் பொருளில் எல்லாம் அது சிதறி வெளிப்படுவது போலத் தோன்றுமே சாய் ரோஸ். அதைத்தான் பதிவு செய்துள்ளேன்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...