புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

வார்த்தைக் கத்திரிசெடி கண்டதிசையிலும்
கிளைபரப்புகிறது
ஒழுங்கு செய்ய வேண்டும்
கொஞ்சம் உன்
வார்த்தைக் கத்திரி கொடு

அரிவாள் தூக்கிக்
கிளைவெட்டு
தளிருக்குக் காயம்படாமல்

வலி
செடிக்குமட்டுமே
உரிமையுள்ளதாய் இருக்கட்டும்

தழைக்குப்பைகளை
வாரிக்கொட்டு
செடியின் கண்படா இடத்தில்.

யுகங்கள்தோறும்
வெட்டுப்படுதலுக்காய்க்
கிளைக்கும் செடிகள்.

***********************நினைவுகள்

மறக்கப்படவேண்டியவை
கனவுகள் காணுதல்
கருகுவதற்கென்றே
கருக்கப்படுவதற்கென்றே

-- 83 ஆம் வருட டைரி 
 

3 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

அருமை! வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுரேஷ் சகோ

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...