எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 3 அக்டோபர், 2014

கல்லாய்..

கல்லாய் உறைந்து போயிருக்கிறேன்
அகத்திலும் புறத்திலும்.
தெய்வத்தை நெருங்கும்போது
தரிசனம் மட்டுமே கண்டு
சமனப்பட்டுப்போகிறேன்.
நொண்டியடிக்கும்
நாயின் காலாட்டம்
மனசோரம் ஒரு ஆட்டம்.
நிஜங்களுடன் எவ்வளவோ
பகிர்ந்துகொள்ள வேண்டும்
என்ற தீவிர அரிப்பு
இது மானுடத்தின் தேடல்
உண்மைத் தேடல்
வரங்கேட்க வந்த பக்தன்
வாய்பிளந்து வாயடைத்துப்
போய் நிற்கும் உன்னத நிலை.
கேட்க வேண்டி விரும்பிய கேள்விகள்
கேட்கப்படாமலே போகும்போது
மகோன்னதத் தவிப்புணர்ச்சியை
உருவாக்கி மேம்படுகின்றன.
தேடிவந்த வாய்ப்புகளை
நழுவ விடும்போது
ஒரு சொல்ல முடியாத சந்தோஷம்
தனக்குள்ளே
நினைத்து நினைத்து
ஐக்கியப்படுத்திக்கொண்ட
ஒன்றைப் பிரித்தெடுத்து
வெளியில் கேட்பது நியாயமா
பாசிட்டிவுக்குப் பதிலாக
நெகட்டிவ் வந்துவிட்டால்
என்கிற கோழைத்தனமா..

-- 82 ஆம் வருட டைரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...