புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

திங்கள், 20 அக்டோபர், 2014

கனவு சாம்ராஜ்யங்கள்.

பிடிவாதம் எனக்குப்
பிடித்தமான சிம்மாசனம்
இனிய சொற்கள் என்
இதயக் கருவூலம் ( கஜானா)
புன்னகை என் பொன்னகை
இறையன்பு என்
உறுதியான செங்கோல்
பணிவுடமை எனக்குப்
பழக்கமான க்ரீடம்
என்னைக் கனிவுடன்
அன்பு செய்யும் நண்பர்களே
ஜீவன்களே
எனக்குப் பழக்கமான குடிமக்கள்.
ஓவியமும் கவிதையும்
என் சிம்மாசனக் கைப்பிடிகள்
தையல், சமையல், துவைத்தல்
வாழ்தல் வாழ்க்கையை இரசித்தல்
என் ஏவலர்கள்.
நான் நினைத்த நேரத்தில்
எனக்கு அடிபணியும் அன்புக் காவலர்கள்
கனவு சாம்ராஜ்யத்தில்
கிடைக்கும் பொழுதிலெல்லாம்
என் கற்பனைத் தேர்
வெற்றிக் கொடி கட்டி
காதல் சிறகுகட்டிப் பறக்கிறது.
பறந்துகொண்டே இருக்கிறது. .

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...