புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புதன், 1 அக்டோபர், 2014

ஆயிரம் முத்தங்கள்.

ஆயிரம் முத்தங்களை
அன்புடன் அள்ளித்தர
மரத்தாயின் கிளைப்பெண்கள்
ஆவலுற்று அழைக்கையில்
ஏனிப்படி விலகி ஓடுகிறான்
இந்தச் சந்திரன்..
ஓ..
தென்றலரசன் சுதந்திரமாய்த்
தழுவிச் சுகிப்பதைப் பார்த்துப்
பொறாமையோ
கிளைப்பெண்கள் தம் வீட்டை
பூவிளக்குக்கொண்டு
அலங்கரித்திருக்கும் நேர்த்தியில்
தன் இருள் வீட்டின்
மின்மினிப்பூச்சிகளின்
நட்சத்திர வெளிச்சங்கள்
தோற்றுவிடும் என்றா.
அல்லது
பச்சை மனப் பெண்களிடைச் சென்றால்
தன் கருமை மனம் நன்கு
வெளிப்படும் என்றா.
எனவே சந்திரனே
உண்மையை ஒப்புக்கொண்டுவிடு
நட்டமில்லை.
உனக்கு ஆயிரம் முத்தப்பூக்களை
சொரிகிறது கிளைப்பெண்.

--82 ஆம் வருட டைரி

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...