புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வியாழன், 23 அக்டோபர், 2014

குட்டி ஆறுதல்.இவளுள் 
சின்னக் கனவாய் 
குட்டி வஸந்தமாய் 
ஸினேஹ மொட்டாய், 
துருதுரு விழியசைப்பாய் 
பிஞ்சுக் கைகளாய் 
மெத்துக் கால்களாய் 
பச்சை மண் வாசமாய் 
ஒரு அசைவு. 

பஞ்சுப் பொதிகள் 
லேசாய்க் கனக்க, 
மல்லிகைச் சரங்கள் 
மெல்ல முட்ட 
தாயின் வயிற்றில் தட்டி. 
“ நானிருக்கிறேன் உனக்கு  .. 
அழாதே அம்மா..” என உணர்த்தும் 
குட்டி ஆறுதல்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...