எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

இனம் காணுதல்.

ஒரு பரபரப்பான மனநிலையில் இருந்து
விடுபடுவது எப்படி..
கொஞ்சம் தண்ணீர் அருந்துங்கள்.
ஒன்றிலிருந்து நூறுவரை எண்ணுங்கள்..
இசை கேளுங்கள். நடனமாடுங்கள்.
நகம் இருந்தால் கடித்துத் துப்புங்கள்.
உடலெங்கும் ஒரு பரவசமும்
நிம்மதியின்மையும் ஊடுருவி இருக்கும்.
உங்களால் எதுவும் செய்யமுடியாது .
உங்களின் பரவசத்தைக் கொய்து
அங்கும் இங்கும் இறைப்பதைத் தவிர.
உளறி மட்டும் தொலைத்துவிடாதீர்கள்
உங்கள் பரவசம் எப்படிப் பட்டதென..
கவிதைகளில் கொஞ்சம் விலக்குண்டு.
திரிசங்கு மனோநிலையில் உலவுபவர்களை
மனிதர்கள் மன்னித்து விலகுவார்கள்.
முடிந்தால் ஒரு கவிதைப் புத்தகம் எழுதிக் காத்திருங்கள்
யார் யாரெல்லாம் தன்னை இனம்கண்டு
கண்டனம் செய்வார்களென..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...